Sunday , August 24 2025
Home / சினிமா செய்திகள் / நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் திடீர் மரணம்

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் திடீர் மரணம்

பிரபல தமிழ், தெலுங்கு, இந்தி நடிகையான ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54

துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவிக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது உயிர் பிரியும்போது கணவர் போனிகபூர் மற்றும் மகள் குஷிகபூர் உடனிருந்தனர்

குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அமிதாப்பச்சன் உள்பட இந்தியாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்தவுடன் திரையுலகில் இருந்து விலகியிருந்த ஸ்ரீதேவி, நீண்ட இடைவெளிக்கு பின் இங்கிலிஷ் விங்கிலிஷ், புலி, மாம் போன்ற படங்களில் நடித்தார்.

ஸ்ரீதேவியின் மரணம் இந்திய திரையுலகிற்கே பேரிழப்பு என திரையுலகினர் இரங்க்ல தெரிவித்து வருகின்றனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv