நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பதற்காக போயஸ் கார்டன் பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டார்.நடிகர் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26ந்தேதி முதல் தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவர்களிடம் புகைப்படமும் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று தென்சென்னை மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்பொழுது, தனது அரசியல் நிலைப்பாடு பற்றி அறிவிக்கிறார். இதற்காக ராகவேந்திரா மண்டபத்திற்கு முன் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த ரசிகர்கள் அதிக ஆர்வமுடன் குவிந்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பதற்காக போயஸ் கார்டன் பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். அவரை வழியில் சந்தித்த செய்தியாளர்களிடம், 10 நிமிடங்கள் பொறுங்கள். அறிவிப்பினை மண்டபத்தில் பாருங்கள் என கேட்டு கொண்டார். அதன்பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.