திருகோணமலையில் கோரவிபத்து- 18 போ் படுகாயம்…
திருகோணமலை- கித்துள் ஊற்று பகுதியில் நேற்று இரவு வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 போ் படுகாயமடைந்துள்ளனா்.
இந்த நிலையில் விபத்திற்குள்ளானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில் மூன்று சிறுவர்கள் அதிதீவிர சிகிற்சைப்பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மரண சடங்கு ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
கந்தளாயில் இருந்து நாவலப்பிட்டி பகுதிக்கு மரண வீடொன்றுக்கு சென்று விட்டு மீண்டும் கந்தளாய் சென்றவர்கள் பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது.
இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான மூன்று சிறுவர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடும் மழையும், வேகமுமே குறித்த விபத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




