Wednesday , October 15 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / குழந்தைகளுக்கு அபிராமி கொடுத்தது தூக்க மாத்திரைகள் அல்ல – அதிர்ச்சி செய்தி

குழந்தைகளுக்கு அபிராமி கொடுத்தது தூக்க மாத்திரைகள் அல்ல – அதிர்ச்சி செய்தி

குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

குழந்தைகளை கொல்ல அவர் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தியதாக முன்பு செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால், அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் தூக்க மாத்திரைகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

இந்நிலையில், போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் ‘நான் குழந்தைகளுக்கு கொடுத்தது தூக்க மாத்திரைகள் அல்ல. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை கொடுத்தேன். என்னிடம் 5 மாத்திரைகள் இருந்தது. அதிகமான மாத்திரைகளை இறந்துவிடுவார்கள் என நம்பி பாலில் கலந்து கொடுத்தேன். ஆனால், என் கணவருக்கும், மகனுக்கும் எதுவும் ஆகவில்லை” என அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv