Wednesday , October 15 2025
Home / முக்கிய செய்திகள் / திருமலையில் உழவு இயந்திரத்தில் சிக்கி இளைஞன் பலி!

திருமலையில் உழவு இயந்திரத்தில் சிக்கி இளைஞன் பலி!

திருகோணமலை, உடப்புக்கேணி பகுதியில் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் ஒருவர், நேற்று (10) மாலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளாரென, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

விநாயகபுரத்தைச் சேர்ந்த கடுக்காமுனை கிராம சேவையாளரான திருமதி காளிப்பிள்ளை ஸ்ரீஸ்கந்தராஜா என்பரின் மகன் பஜிர்வன் (வயது 19) என்ற இளைஞனே இவ்வாறு பலியாகியுள்ளார்.

வயல் உழுதுவிட்டு, உழவு இயந்திரத்தைக் கழுவுவதற்காக தண்ணீர் காணப்பட்ட இடத்துக்குள் இறக்கிய போது, உழவு இயந்திரம் புரண்டதாகவும் அதில் இருந்த வீலுக்குள் சிக்குண்டமையால் இளைஞன் உயிரிழந்ததாகவும் தெரியவருகின்றது.

இளைஞனின் சடலம், ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை, சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv