இலங்கையின் அரச அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று மாலை அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பான முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமாகிய இரா சம்பந்தன் தலைமையில் ஜனாதிபதியைச் சந்தித்தனர்.
ஜனாதிபதியுடனான சந்திப்பில் முக்கிய விடயமாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகக் கூட்டமைப்பால் வலியுறுத்தப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, இதற்கான பொறிமுறை பற்றி நாளை மறுநாள் டிசெம்பர் 3ஆம் நாள் பேசி முடிவெடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் சட்டமா அதிபரும் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.