Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / விரல்கள் இல்லாதபோதும் பரிட்சையில் சாதனை படைத்த பாடசாலை மாணவன்

விரல்கள் இல்லாதபோதும் பரிட்சையில் சாதனை படைத்த பாடசாலை மாணவன்

குருணாகலில் மாணவன் ஒருவரின் அபார திறமை குறித்து ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.குருணாகலில் மாணவன் ஒருவரின் அபார திறமை குறித்து ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் இப்பாகமுவ, கிரிபமுன வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார்.பிறக்கும் போதே கை மற்றும் கால்களில் விரல்களை இழந்த நிலையில் பிறந்துள்ளார்.உடலில் எவ்வளவு குறைகள் இருந்தாலும், உணவு உட்கொள்வது ஆடை, அணிந்து கொள்வது உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் தனியாகவே சமோதிய செய்து வந்துள்ளார்.

ஒருபோதும் தனது குறை குறித்து வருத்தமடையாத சமோதிய கல்வி கற்பதிலும் சிறந்த நிலையில் காணப்படுகின்றார்.மன தைரியத்துடன் வாழும் சமோதிய 181 புள்ளிகளை பெற்று புலமை பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

குடும்ப வறுமை மற்றும் உடல் ஊனத்துடன் வாழும் இந்த மாணவன், சமூகத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு என்பதனை மறுக்க முடியாதென பாடசாலை சமூகத்தினர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv