Tuesday , January 28 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / தமிழ்நாட்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு

பாஜக தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் காலை கூடியிருக்கிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் L. முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதே குழு நேற்று ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியில் இருந்தும் மாநில நிர்வாகிகளிடம் இருந்து பெறப்பட்ட பட்டியல்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் உத்தேச வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டும் என கூறப்படுகிறது.

பின்னர் இக்குழு இன்றே நண்பகல் தில்லி சென்று தேசிய தலைமையிடம் வழங்க இருக்கிறது. மீண்டும் அங்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் முடிவு செய்யப்பட்டு பாஜகவின் இரண்டாவது வேட்பாளர் பட்டியலில் தமிழக வேட்பாளர் பெயர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது. வேட்பாளர் பட்டியலில் மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சமீபத்தில் பாஜகவில் இணைந்த விஜயதாரணி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் , H. ராஜா, வினோஜ், ஆகியோர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது.

நேற்று இந்த கூட்டம் குறித்து கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி ஸ்ரீநிவாசன், “தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும், இரண்டு தலைவர்கள் கொண்ட குழு விவாதம் நடத்தி வேட்பாளர்களை நியமிக்க உள்ளோம். தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இந்த குழுவை சந்தித்து தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்களவை தேர்தல் அலுவலகங்கள் அல்லது மாவட்ட கட்சி தலைமையகத்தில் இந்த சந்திப்புகள் நடைபெறும். இந்த தொகுதிகளுக்கு வரும் தலைவர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்,” என்றார்.

மேலும் மத்திய பாஜக கடந்த சனிக்கிழமை 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 195 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது. இதில் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் ஸ்மிருதி இரானி உட்பட 34 மத்திய அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் 2024 மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்த முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட போது பேசிய பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே, “பிரதமர் மோடி வாரணாசியிலும், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அருணாச்சல மேற்கு தொகுதியிலும், எம்பி பிஷ்ணு பதா ரே அந்தமான் நிக்கோபார் தொகுதியிலும் போட்டியிடுகிறார். எம்பி தபீர் காவ் அருணாச்சல கிழக்கு தொகுதியிலும், அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திப்ருகாரிலும் போட்டியிடுகிறார். நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார்

Check Also

இலங்கை செய்திகள் 25/02/2024 – Sri lanka Tamil News | Tamil Nadu News Tamil l World News Tamil

இலங்கை செய்திகள் 25/02/2024 – Sri lanka Tamil News | Tamil Nadu News Tamil l World …