Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கல்முனை பகுதி மாபெரும் கலவர பூமியாக மாறும் அபாய நிலை!

கல்முனை பகுதி மாபெரும் கலவர பூமியாக மாறும் அபாய நிலை!

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டாமெனக் கோரி இன்றையதினம் முஸ்லிம் மக்கள் நடத்தும் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி தமிழர்கள் மேற்கொண்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்பில் அமைதியாக இருந்த முஸ்லிம் மக்களை ஹரீஸ் எம்.பி தூண்டிவிட்டு இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட வைத்துள்ளார்.

நேற்றைய தினம் தமிழர்கள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு நல்லெண்ண அடிப்படையில் அவர்களின் அத்தியாவசிய கோரிக்கை நிறைவேற முஸ்லிம் மக்கள் ஆதரவாக இருந்தனர்.

எனினும் இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஹரீஸ் எம்.பி கொழும்பில் இருந்தவாறே முஸ்லிம் இளைஞர்களை தூண்டிவிட்டு இன்றையதினம் தமிழர்களுக்கு எதிராக இந்த போராட்டத்தை நடத்த வழிவகுத்துள்ளார்.

அத்துடன், இனக்கலவரம் ஒன்று ஏற்படுவதற்கும் இவரின் செயற்பாடுகள் வழிவகுக்கின்றன.

இலங்கையின் நான்கு திசைகளிலும் இருந்து பௌத்த தேரர்கள் தற்போது கல்முனைக்கு விரைந்து குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளனர்.

இந்நிலையில் தற்போது முஸ்லிம் மக்களை தூண்டிவிட்டு ஹரீஸ் எம்.பி மாபெரும் போராட்டத்தை நடத்துகின்றமை ஹக்கீம் ஆரம்பத்திலேயே இவ்வாறானவற்றை கட்டுப்படுத்த தவறிவிட்டதன் விளைவு என தோன்றுகின்றது.

ஹரீஸ் எம்.பியின் இந்த நடவடிக்கை கல்முனை பகுதி மாபெரும் கலவர பூமியாக மாறும் அபாய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv