Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த இளைஞன் கைது

சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த இளைஞன் கைது

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை வெலிமடை போரகஸ் சில்மியாபுர – பதுரியா மாவத்தையில் வசித்து வரும் 21 வயதான இளைஞரே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இளைஞன், தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீம் நடத்திய உபதேச கூட்டங்களில் கலந்துக்கொண்டுள்ளதுடன் மாவனெல்லையில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். இளைஞன் தொடர்பாக வெலிமடை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv