வவுனியா மணியர்குளம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த முச்சக்கரவண்டி திடீர் என்று தீப்பிடித்துள்ளது. எனினும் அப்பகுதியில் நின்றவர்களின் வேகமான செயற்பாட்டால் தீ அணைக்கபட்டிருந்தது. குறித்த தீ விபத்தினால் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்ததுள்ளது.
மின்சார ஒழுக்கே தீ விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.