கடந்த மாதம் 07 ஆம் திகதி இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஹட்டன் அந்தோனியார் தேவஸ்தானத்திற்கு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அது தொடர்பான சிசிரிவி காட்சிகளும் வெளியாகியிருந்தன.
இந்த இரண்டு இளைஞர்கள் உட்பட 07 இளைஞர்கள் இன்று காலை ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இளைஞர்கள் கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பு பிரதான பள்ளிவாசலில் இருந்து ஜமாத்திற்காக நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இவர்கள் ஹட்டன் பகுதிக்கு வந்தது இதுவே முதல் தடவை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 07 ஆம் திகதி பழமை வாய்ந்த ஹட்டன் அந்தோனியார் தேவஸ்தானத்தை பார்வையிட சென்றபோது தேவஸ்தானத்தின் பூஜை ஆரம்ப நிகழ்விற்காக தேவஸ்தானத்தில் பொருத்தபட்டிருந்த மணி சத்தத்தினை கேட்ட பிறகு இவர்கள் பயத்தில் சென்றுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே குறித்த இளைஞர்கள் பயங்கரவாதத்தோடு எவ்வித தொடர்புகளும் இல்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.