ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் மாஸ்டர்மைன்ட என்று சொல்லப்படுகின்ற சஹ்ரானின் மனைவி கடந்த 26ம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிலிருந்து உயிர்தப்பி அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் அவர் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கும் போதும் இடை.. இடையே காது கேட்காதது போல் நடிப்பதாக கூறப்படுகிறது.
சஹ்ரானின் மனைவியான பாத்திமாவிடமிருந்து எந்த தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் காது கேட்கவில்லை என நாடகமாடி வருவதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு நிலைமைகள் இருக்கின்றபோது இன்னும் பல விடயங்கள் மறைக்கப் படுவதாக கூறப்படுகிறது.