Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சஹ்ரானின் நெருங்கிய சகா வாழைச்சேனையில் சிக்கினார்

சஹ்ரானின் நெருங்கிய சகா வாழைச்சேனையில் சிக்கினார்

டெட்டனேற்றர் வெடிபொருட்களுடன் ஒருவரை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு ரிதிதென்ன ஓமடியாமடு பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 138 டெட்டனேற்றர் குச்சிகளை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவரிடம் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கைதுசெய்ப்பட்ட நபர் 48 வயதுடைய ஆதம் லெப்பை காதர் என அடையாளம் காணப்பட்டதுடன் சஹ்ரானின் வாகன சாரதியான அண்மையில் கைதுசெய்யப்பட்ட கபூரின் நெருங்கிய சகாவென விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv