Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / உயர் பதவிகளில் இன்று அதிரடி நியமனங்கள்!

உயர் பதவிகளில் இன்று அதிரடி நியமனங்கள்!

சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய புதிய பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேலும், சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா பதில் சட்டமா அதிபராகவும், மேலதிக கணக்காய்வாளர் நாயகம் சூலந்த விக்ரமரத்ன கணக்காய்வாளர் நாயகமாகவும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராகவும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv