பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் பங்குபெறும் ஒவ்வொரு பாடகரும் மக்களிடம் நல்ல அங்கீகாரத்தை பெறுகின்றனர்.
அதோடு தங்கள் திறமையால் சினிமாவிலும் ஜொலிக்க ஆரம்பிக்கிறார்கள். சிறுவர்களுக்கான போட்டி இப்போது நடந்து வருகிறது இதில் பங்குபெற்ற இலங்கை பெண் சின்மயி இப்போது மகிழ்ச்சியில் உச்சத்தில் உள்ளார்.
ஏனெனில் இதுவரை தான் தனது தாய் நாட்டிற்கு சென்றதில்லை என்று கூறி மன வருத்தம் அடைந்தார். இந்த நேரத்தில் சூப்பர் சிங்கர் குழு சின்மயி மற்றும் அவரது அம்மாவை இலங்கை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களது குடும்பம் ஆனந்த கண்ணீரில் அந்த தருணத்தை கொண்டாடியுள்ளனர்.