Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தமிழ் மக்களுக்கும் இறைமை உண்டு! சம்பந்தன் தெரிவிப்பு

தமிழ் மக்களுக்கும் இறைமை உண்டு! சம்பந்தன் தெரிவிப்பு

தமிழ் மக்களுக்கும் இறைமைய உண்டு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த இறுதிநாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்பின் உருவாக்கப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. எனினும் தற்போது அந்த பணிகள் கைவிடப்பட்டுள்ளன. ஏன் அந்த பணிகள் கைவிடப்பட்டன என்று தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எங்கள் அதிகாரம், எங்கள் உரிமைகளை நாங்கள் அனுபவிக்க இடமளிக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv