Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கை மக்களிற்கு அபாய அறிவிப்பு!

இலங்கை மக்களிற்கு அபாய அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை காணப்படும் எனவும் முதியோர் மற்றும் சிறுவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதன்படி, மேல், தெற்கு மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் எனவும் நிலையம் குறிப்பிட்டுள்ளது. இப்பகுதிகளில் 32 இற்கும் 41 இற்கும் இடைப்பட்ட செல்சியஸ் வெப்பநிலை காணப்படும் எனவும் கூறியுள்ளது.

இந்த வெப்பநிலைக்கு ஈடுகொடுப்பதற்கு சகலரும் நீரை அதிகம் அருந்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களைக் கேட்டுள்ளது. அத்துடன், வீடுகளில் தங்கியுள்ள முதியோர், நோயாளர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

பகல் வேளையில் வெளியில் நடமாடுவதைக் குறைத்துக் கொள்ளுமாறும், இளம் நிறத்திலான இலகுவான ஆடைகளை அணியுமாறும், பயணங்களின் போது தரித்து நிற்கும் வாகனங்ளில் சிறுவர்களை அதிக நேரம் வைத்திருப்பதை தவிர்ந்து கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகூடிய வெப்பநிலை வவுனியாவிலும், இதன் செல்சியஸ் அளவு 37.1 எனவும், அதி குறைந்த வெப்பநிலையான 7.6 செல்சியஸ் நுவரெலியாவிலும் காணப்பட்டதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த வெப்பநிலைக்கு ஈடுகொடுப்பதற்கு சகலரும் நீரை அதிகம் அருந்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களைக் கேட்டுள்ளது.

அத்துடன், வீடுகளில் தங்கியுள்ள முதியோர், நோயாளர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

பகல் வேளையில் வெளியில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளுமாறும், தரித்து நிற்கும் வாகனங்ளில் சிறுவர்களை அதிக நேரம் வைத்திருப்பதை தவிர்ந்து கொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டள்ளனர்.

மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கடுமையான அறிவிப்பு விடுக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv