மரண தண்டனையை ரத்து செய்யுமாறு இலங்கையை பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.உலகளாவிய ரீதியில் மரண தண்டனையை இடைநிறுத்துவதற்கான ஐ.நா. தீர்மானத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவளித்த நாடு என்ற வகையில் இதனை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் மார்க் ஃபீல்ட் இதனை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மரண தண்டனை தொடர்பான பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. எனவே மரண தண்டனையை இடைநிறுத்தத்திற்கான இலங்கையின் ஆதரவு தொடர்ந்து நீடிக்கும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறான தடைகள் வந்தாலும் இரண்டு மாதங்களில் மரண தண்டனை அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் நாடாளுமற்றத்தில் உறுதியளித்திருந்தார்.இந்நிலையில், பிரித்தானியா இவ்வாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.