Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் மரணத்தில் சந்தேகம்

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் மரணத்தில் சந்தேகம்

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் நேற்று மாலை அப்பம்மாவுடன் சென்ற சிறுவன் இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளமை கிராமத்தையே சோகமாக மாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை சுந்தரபுரத்திலிருந்து சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 3 பகுதிக்கு தொண்ணூறாம் நாள் நினைவஞ்சலிக்கு முன் ஆயத்த வேலைக்காக சிவானந்தம் தருண் என்ற ஆறு வயது சிறுவன் அப்பம்மாவுடன்சென்றிருந்ததார்.

அங்கு ஏனைய சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்ததாகவும் இரவாகியதால் சிறுவனை காணவில்லை என நீண்ட நேரமாக தேடியும் எங்குமே கிடைக்கவில்லை.

இதனையடுத்து இன்று கிணற்றில் இருந்து குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் குறிப்பிட்ட கிணறானது முழுமையாக நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் கிணற்றின் கட்டு 3அடிக்கு உயற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே சிறுவனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துவருகின்றனர்

சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv