Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இராணுவத்துக்கு எதிராக பொங்கி எழுந்த முல்லைத்தீவில் மக்கள்

இராணுவத்துக்கு எதிராக பொங்கி எழுந்த முல்லைத்தீவில் மக்கள்

கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பாக அந்த பிரதேசத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற கோசத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் இன்று காலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவமே கேப்பாபுலவு மண்ணிலிருந்து உடனடியாக வெளியேறு என்ற பிரதான பதாகையைச் சுமந்தவாறு மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக எமது களநிலைச் செய்தியாளர் கூறுகின்றார்.

ஆர்ப்பாடத்தில் இடுபட்டுள்ள மக்களை அச்சுறுத்தும்வகையில் இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வாளர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv