Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / தேசிய ரீதியில் சாதித்த தமிழ் மாணவர்கள்…

தேசிய ரீதியில் சாதித்த தமிழ் மாணவர்கள்…

இலங்கையின் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவை நெருங்கிய நேரத்தில் வெளியிடப்பட்டன.

இதன்படி தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் முன்னிலை வகித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரம் வெளியானது,

உயிரியில் விஞ்ஞான பிரிவில் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த கலனி ராஜபக்ச

பௌதீக விஞ்ஞான பிரிவில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த சந்துனி விஜயகுணவர்தன

வர்த்தக பிரிவில் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த கசுன் விக்ரமரத்ன

கலை பிரிவில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த சேனதி த டி அல்விஸ்

பொறியியல் பிரிவில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ம.ப.ப.யசாஸ் பத்திரன

தொழில்நுட்பவியல் பிரிவில் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த சந்துனி கொடிபுலி

இதேவேளை வெளியாகிய பெறுபேறுகளின்படி தமிழர் தாயகத்தைச் சேர்ந்த மாவட்டங்களோ அல்லது தமிழ் பிள்ளைகளோ முதல் இடத்தைப் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv