Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சகல நாடுகளுக்கும் ஒரே கடவுச்சீட்டில் பயணிக்கலாம்

சகல நாடுகளுக்கும் ஒரே கடவுச்சீட்டில் பயணிக்கலாம்

இம்மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்காக பிரத்தியேகமாக விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

இதுவரை காலமும் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் மத்திய கிழக்கு நாடுகளுக்காக விநியோகிக்கப்பட்டு வந்த பிரத்தியேக கடவுச்சீட்டு எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் விநியோகிக்கப்படமாட்டாது.

ஆனால் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அனைத்து நாடுக்கான கடவுச்சீட்டு மாத்திரமே நடைமுறையில் காணப்படும் எனவும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv