பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை காயத்திரி ரகுராம். சமூக வலைதளங்களில் பல நேரங்களில் இவரும் சர்ச்சைகளில் சிக்கிவிடுவார். இவரை விமர்சிப்பவர்களுக்கும் அவர் சரியான பதிலடி கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் அண்மைகாலமாக சபரிமலை சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. இதில் பெண்கள் அங்கே செல்லலாம் என உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கி விட்டது.
இந்நிலையில் தமிழக பெண்கள் 12 பேர் கடந்த இரு தினங்களுக்கு முன் சபரிமலைக்கு சென்ற போது தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் சென்னை திரும்பினார்கள்.
இந்நிலையில் நடிகை காயத்திரி ரகுராம் “சபரிமலை ஐயப்பன் கோவில் பாரம்பரிய வழக்கத்தில் நம்பிக்கை இல்லாத பெண்கள் எதற்காக அங்கே செல்பிடிகிறார்கள் என தெரியவில்லை. அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே அங்கு செல்ல அடம்பிடிகிறார்கள்.
இப்படி செய்வதால் எதை நிரூபிக்க போகிறார்கள். ஐயப்பன் மீது நிஜமாகவே நம்பிக்கையிருந்தால் பல வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வருவது போல 40 வயது வரை காத்திருந்து அதற்கு பிறகு செல்லுங்கள்” என கூறியுள்ளார்.