ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங் அவர்களுக்கு சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொடுத்துள்ளார்.
ஆனால் மைத்திரி சில நாட்களுக்கு முன் ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்றால் நான் ஒரு மணி நேரத்திலே பதவி ராஜினாமா செய்வேன் என மைத்திரி அதிரடியாக அறிவித்திருந்தார்.
ஆனால் இப்போது ரணில் பதவி பிரமாணம் இவர் முன்னிலையிலே நிறைவேறியுள்ளது ஆனால் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நின்றுள்ளார்.ஆகையால் அவர் சொன்ன அறிவிப்பின் படி இன்னும் ஒரு மணி நேரத்திலே பதவி விலகுவாரா என மக்கள் பலர் மைத்திரிக்கு எதிராக கேள்வி எழுப்பி வருகின்றனர்.