Wednesday , August 20 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ரணிலுக்கு ஆதரவு கோரி இன்று சபையில் வாக்கெடுப்பு

ரணிலுக்கு ஆதரவு கோரி இன்று சபையில் வாக்கெடுப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை இன்று (12) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்தப் பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க, அகில விராஜ்காரியவசம், லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, பளனி திகாம்பரம், மங்கள சமரவீர, ரிஷாட் பத்தியுத்தீன் ஆகியோரினல் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணை குறித்து கட்சித் தலைவர்கள், ஏனைய உறுப்பினர்கள் ஆகியோரிடம் கருத்துக்கள் பெறப்பட்டதன் பின்னர் வாக்கெடுப்பும் நடாத்தப்படவுள்ளது.

ஜனநாயகத்தை நிலைநாட்டும் விடயங்களில் மக்கள் விடுதலை முன்னணி ஒத்துழைப்பு வழங்கினாலும் இந்த விடயத்தில் வழங்காது என எதிர்பார்க்கின்றோம் எனவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் தமக்கு 113 பேரை விடவும் கூடுதலானவர்களின் ஆதரவு உள்ளது எனவும் ஐ.தே.க.யின் அஜித் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv