தரம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளமையால் எதிர்வரும் வாரங்களில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீ்டசைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.
இப்பரீட்சை பெறுபேறுகளை கல்வி அமைச்சு மற்றும் பாடசாலைகளுக்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த புலமைப்பரிசில் பரீட்சையில் 3,55,326 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.