ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அப்பதவிகளை வகிப்பதற்கு அதிகாரமில்லையென ஐக்கிய தேசிய கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு தற்போது மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அதன் 122 உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே தற்போது விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவை ஆகியவற்றுக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை இரத்து செய்யுமாறு கோரியே இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு மீதான வழக்கை மேல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபயசேகர ஆகியோரின் முன்னிலையில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.