Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சபாநாயகரின் தந்திரம் அம்பலம்

சபாநாயகரின் தந்திரம் அம்பலம்

சபாநாயகர் கருஜயசூரிய, ஹன்சாட் அறிக்கையொன்றை தந்திரமாக தயாரித்தமை தொடர்பில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டினை பிவித்துரு ஹெல உருமய கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தில் மேற்கொண்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஹன்சாட் அறிக்கையை சபாநாயகர் தந்திரமாக தயாரித்துள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உருமயவின் பிரதி தலைவர் மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார்.

இதனுடன் கடந்த 14, 15, 16, 19, 21 மற்றும் 23 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறாததால் குறித்த அறிக்கையை ஏற்க முடியாது என அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கன் சபாநாயகரிடம் அறிவித்துள்ளனர்.

அவைத்தலைவர் அமைச்சர் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட தரப்பினர் எழுத்து மூலம் இதனை சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த கடிதத்தில், நாடாளுமன்ற நடவடிக்கைகள், அரசியல் அமைப்பு, நிலையியல் கட்டளை மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய இடம்பெறவில்லை என தெரிவிக்கப்ட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv