பிரித்தானியாவில் அரசியல் அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கையர் ஒருவருக்கு, அந்த நாட்டின் உள்துறை அமைச்சினால் 19 ஆயிரத்து 500 பவுண்கள் நட்டயீடு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக தெரிவித்து பிரித்தானியாவில் அரசியல் அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கையருக்கே இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.பிரித்தானிய இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கே.ஜீ என்று அடையாளப்படுத்தப்படும் அவர், பிரித்தானிய குடியேறிகள் முகாமில் 2016ம் ஆண்டு ஜனவரி – பெப்ரவரி மாதக் காலப்பகுதியில் 30 நாட்கள் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
தாம் சட்டத்துக்கு முரணாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்து அவர் லண்டன் மேல்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு 19 ஆயிரத்து 500 பவுண்களை நட்டயீடாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.