யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்களில் ஆயிரத்து 119 ஏக்கர் நிலம் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்கு தொடர்ந்தும் தேவைப்படும் அதே நேரம் 786 ஏக்கர் நிலம் விடுவிக்க கோரும பிரதேசத்தில் 216 ஏக்கரில் இராணுவத்தினரின் முக்கிய கட்டிடஙகள் உள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
ஜனாதிபதி தலமைநில் நேற்றைய தினம் இடம்பெற்ற வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணி மகாநாட்டிலேயே படையினரால் மேற்படி விடயம் சுட்டிக் காட்டப்பட்டது.
குறித்த கூட்டத்தில்ல கடத்த கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது யாழ்ப்பாணம மாவட்டத்தில் இராணுவத்தினரின் வசமுள்ள நிலவிடுவிப்பு தொடர்பான முன்னேற்றம் தொடர்பில் ஆராயும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அதாவது யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போதும் 4 ஆயிரத்து 565 ஏக்கர் நிலம் படையினர் வசமுள்ளது. இதில் 3 ஆயிரத்து 200 ஏக்கர் நிலம் நிராணுவத்தினரின் பிடியில் உள்ளது.
இவை தொடர்பில் ஆராயப்பட்டவேளை தம்மால் விடுவிக்கப்படவுள்ள பிரதேசத்தில் இடமாற்றப் பணிக்காக 210 மில்லியன் ரூபா பணம் வேண்டும். எனவும் கோரினர். குறித்த பணம் ஒதுக்கித் தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.
இதேநேரம் திக்கம் வடிசாலையை உடன் இயங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது. அதன் பிரகாரம் எடுத்த முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டவேளையில் திக்கம் வடிசாலையை மீள ஆரம்பிக்கும் வகையிலான படிகளை ஜனவரி மாதம் முதல் அமைப்பதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இதன்போது கருத்துரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடந்த காலத்தில் குறித்த வடிசாலையில் இருந்து அரசியல் செயல்பாட்டிற்காக பணம் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அதே அரசியல்வாதியிடம் மீண்டும் அதே அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. எனத் தெரிவித்தார்.
இதன்போது இது பொய் , பொய் அது சிலவேளை மகேஸ்வரனாக இருக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இதன்போது மீண்டும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோப் அறிக்கையில் இந்த அமைச்சரின் பெயர் குறித்தே எழுத்தப்பட்டுள்ளது. என்றார்.
யாழ்ப்பாணம் சீமேந்து தொழிற்சாலையை கைத்தொழில் பேட்டையாக அமைப்பது தொடர்பில் ஆராய்ந்தவேளையில் காங்கேசன்துறை சீமேந்து ஆலையை அப்படியே அதே இடத்தில் இயக்க வேண்டும் என்பதே அப் பகுதி மக்களின் விருப்பமாகவுள்ளது. ஆனால் அரசியல்வாதிகளே அதனை எதிர்க்கின்றனர். என இலங்கை சீமேந்து கூட்டுத் தாபனத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதன்போது கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அப் பகுதியின் நிலமை தெரிந்த அங்கே வாழும் மக்களின் கருத்தை அறித்தே எமது கருத்தை பல தடவை வலியுறுத்தி விட்டோம். அதனால் அங்கே மீண்டும் சீமேந்து ஆலையை அமைக்க உடன்பட முடியாது. எனத் தெரிவித்தார்
குறித்த விடயம் சர்ச்சையாக உருவெடுக்க ஆரம்பித்தவேளையில் கிழக்கு , வடக்கு மாகாண ஆளுநர்கள் குறுக்கீடு செய்து அப்பகுதியில் உண்மையில் மீண்டும் சீமேந்து ஆலையை உருவாக்க முடியாது. என்றனர் .
இதனையடுத்து அங்கே தொழில் பேட்டை அமைக்கும் முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.