ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச இதனைத் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழுவின் கூட்டம் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதன்போது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கட்சியின் முன்னிலை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு தௌிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.