Wednesday , October 15 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பெண்கள் – ஹெச்.ராஜா சர்ச்சை கருத்து

ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பெண்கள் – ஹெச்.ராஜா சர்ச்சை கருத்து

உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

ஆனால், இந்த தீர்ப்பை ஏற்க முடியாது.. சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கமாட்டோம் என கேரளாவில் உள்ள பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, சில பெண்கள் விரதம் இருந்து கோவிலுக்கு செல்ல முயன்றனர். ஆனால், பல்வேறு அமைப்பினர் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

மேலும், கோவிலுக்கு வரும் பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் “இது பால் சமநிலை பிரச்சினை இல்லை. ஐயப்ப சுவாமி மீது பக்தி உள்ள தாய்மார்கள் நாங்கள் காத்திருக்க தயார் என்று தெளிவாக போராடிவரும் நிலையில் கோவிலுக்கு செல்ல முற்படுபவர்களின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட வேண்டும்”என பதிவிட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv