Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வைரமுத்து வினாவால் ஈழத்தில் ஆவேசமடைந்த இயக்குனர் பாரதிராஜா

வைரமுத்து வினாவால் ஈழத்தில் ஆவேசமடைந்த இயக்குனர் பாரதிராஜா

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தென்னிந்தியாவின் பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர், இயக்குனர் சிகரம் பாரதிராஜா ஊடகவியலாளர்களின் கேள்விகளால் ஆவேசமடைந்துள்ளார்.

ஊடக சந்திப்பின் போது, தனது கலைத்துறை தொடர்பாகவும் தனது தொழில் தொடர்பாக எது கேட்டாலும் பதில் கூறுவேன் என இயக்குனர் தெரிவித்திருந்தார்.

எனினும், கலந்து கொண்டிருந்த ஒரு சில ஊடகவியலாளர்கள் தமிழ்நாட்டில் தற்போது அதிக சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் ஒன்றான மீ டூ.. விடயம் தொடர்பில், பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது அளித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இயக்குனர் பாரதிராஜாவிடம் கேள்விகளைத் தொடுத்துள்ளனர்.

இதன்போது, கோபமடைந்த இயக்குனர் எனது கலைத்துறை தொடர்பில் எந்த கேள்விகளுக்கும் பதிலளிப்பேன், அதை தவிர்த்து வேறு ஏதும் கேட்க வேண்டாம் என ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த சர்ச்சை தொடர்பில் ஆதாரம் ஏதும் உங்களிடம் இருந்தால் கேள்வி கேட்கவும், நீங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் கேட்கும் போது அதற்கு நான் பதிலளிக்க மாட்டேன் என ஊடகவியலாளர்களிடம் ஒருமையில் பேசி விட்டு அங்கிருந்து இயக்குனர் அகன்றுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv