Thursday , August 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கையர்களையும் விட்டு வைக்காத சிம்மயி!

இலங்கையர்களையும் விட்டு வைக்காத சிம்மயி!

இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பாடகி சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே போல பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக டுவிட்டரில் பிரபலங்கள் பெயர்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் பெண் ஒருவர் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய பதிவை சின்மயி ஷேர் செய்துள்ளார்.

அதில், சில ஆண்டுகளுக்கு முன்னாள் நான் மும்பையில் இருந்தேன்.

அப்போது நான் தங்கியிருந்த ஹொட்டலில் என் தோழியும் தங்கியிருந்ததால் அவரை தேடினேன்.

அப்போது ஐபிஎல் சீசனில் பிரபலமாக இருந்த இலங்கை வீரர் என்னிடம் வந்து உங்கள் தோழி என் அறையில் இருப்பதாக கூறினார்.

இதையடுத்து நான் அங்கு சென்றபோது தோழி அங்கு இல்லை. அப்போது கிரிக்கெட் வீரர் என்னை படுக்கையில் தள்ளி என் முகம் அருகில் வந்தார்.

அவர் வாட்ட சாட்டமாக இருந்ததால் அவரை எதிர்த்து என்னால் போராட முடியவில்லை. அப்போது ஹொட்டல் ஊழியர் கதவை தட்டினார், பின்னர் அவர் கதவை திறந்தவுடன் நான் வெளியே ஓடிவிட்டேன்.

இதை வைத்து அந்த வீரர் பிரபலமானவர் என்பதால் நான் வேண்டுமென்றே அவர் அறைக்கு சென்றதாக கூட சிலர் கூறலாம் என தெரிவித்துள்ளார்.

https://twitter.com/Chinmayi/status/1050302690708750339

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv