Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / துர்நாற்றம் வீசும் திருகோணமலை கடற்கரை

துர்நாற்றம் வீசும் திருகோணமலை கடற்கரை

திருகோணமலை உற்துறைமுக கடற்கரைப்பகுதியில் என்றும் இல்லாதவாறு அதிகளவிலான குப்பைகள் கரையொதுங்கியுள்ளன.

கடற்கரை ஓரங்களில் பிலாஸ்டிக் போத்தல்கள், குப்பைகள் என பரவலான பொருட்கள் கரையொதுங்கியிருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் கடற்கரைப்பகுதியின் சில இடங்களில் துர்நாற்றம் வீசுவதாகவும், இதன்காரணமாக அப்பகுதியூடாக பயணிக்கும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவருவதனால் நதிகளினூடாக இந்தக் குப்பைகள் அடித்து வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv