அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பில் தீர்வைப் பெற்றுக் கொடுக்கா விட்டால் அரசியலில் இருப்பவர்கள் பதவி விலகுங்கள் இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பாக சட்டமா அதிபரைச் சந்திப்பதற்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அது ஏன்? கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் காளி கோயில் திருவிழாவுக்குச் செல்வதாலா சந்திப்புக்குச் செல்லவில்லை.
அரசியல் கைதிகள் விவகாரம் காளிகோயில் திருவிழா போன்றது இல்லை.அனைத்துத் தரப்பினரும் இணைந்து உடனடியாகத் தீர்வு காண வுண்டும்.உங்களால் முடியாவிட்டால் பதவிகளை விட்டு விலகுங்கள் என்றார்.