Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அரசியல் முகத்தை வெளிப்படுத்தும் கோத்தபாய

அரசியல் முகத்தை வெளிப்படுத்தும் கோத்தபாய

உத்தரவுகளை மட்டுமே பிறப்பிக்கத் தெரிந்த கோத்தபாய, அழைப்புகளையும் விடுக்கத் தொடங்கினார்…

இலங்கையின் அனைத்து தேசப்பற்றுள்ள சக்திகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள “மக்கள் சக்தி கொழும்புக்கு” என்ற அரச எதிர்ப்பு பேரணிக்காக செப்டம்பர் மாதம் 05ம் திகதி ஒன்று கூடுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் புத்திஜீவிகளிடமும் அவர் இந்த வேண்டுகொளை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில், பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்ஸ இராணுவக் கட்டளைகளைப் பிறப்பிப்பவராகவும், கடும் பொக்காளாராகவும், அரசியல் சமரசங்கள் செய்யபத இராணுவ பாணியிலான நிர்வாகத்தை முன்னெடுத்தவராக காணப்பட்டார்.

எனினும் 2020 தேர்தலில் அரசியல் பிரவேசத்தை மேற்கொள்வதற்கான முன்நகர்வுகளை மேற்கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ஸ தற்போது அரசியல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகவும், வெகுஜன போராட்டங்களில் நம்பிக்கை கொண்டவராகவும் தனது செயற்பாடுகளை வடிவமைத்து வருகிறார்…

வடக்கு கிழக்கில் நடந்த வெகுஜனபோராட்டங்கள், தெற்கில் நடந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை, அடிதடிகளாலும், துப்பாக்கிக் குண்டுகளாலும், கண்ணீர் புகைக் குண்டு வீச்சுகளாலும், இரும்புக் கரம் கொண்டு நசுக்கிய கோத்தபாய ராஜபக்ஸ தற்போது தனது இராணுவ முகத்தை மாற்றி அரசியல் முகத்தை பொருத்தி இருப்பதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்…

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv