Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / என்ன நடக்கும் எனும் அச்சத்தில் மைத்திரி

என்ன நடக்கும் எனும் அச்சத்தில் மைத்திரி

சக்திவாய்ந்த சில பெரு நிறுவனக் குழுக்கள் (corporate groups) அரசாங்கங்களை கவிழ்க்கும் சூழ்ச்சிகளுடன் தொடர்புபட்டுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நேற்று ஆரம்பமான பிம்ஸ்ரெக் நாடுகளின் தலைவர்களின் நான்காவது உச்சிமாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சில சக்திவாய்ந்த பெரு நிறுவனக் குழுக்கள் அரசாங்கங்களை கவிழ்ப்பதில் சிலவேளைகளில் வெற்றிபெற்றிருக்கின்றன. எனவே, இந்தப் பெரு நிறுவனக் குழுக்கள் விடயத்தில், நாடுகளின் தலைவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

உலக சமூதாயத்தின் முன்னேற்றத்துக்கு போதைப்பொருள் ஒரு பெரிய தடையாக மாறியிருக்கிறது. போதைப் பொருள் கடத்தல்களை தடுப்பதில் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.” என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv