யாழ். மணியந்தோட்டம் பகுதியில் சற்று முன்னர் நடமாடும் பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த சிலரே பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முச்சக்கரவண்டியை இடைமறித்து விசாரித்தவேளையிலேயே பொலிஸார் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், இதன்போது படுகாயமடைந்த ஒரு பொலிஸ் அதிகாரி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொரு பொலிஸாரும் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.