Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நல்லூர் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் பவனி

நல்லூர் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் பவனி

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 12ஆம் நாள் திருவிழா அடியார்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்றது.

முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், வள்ளி – தெய்வானை கிளி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்கடாட்சம் புரிந்தனர்.

இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன்களை செலுத்தி முருகப்பெருமானின் அருள் பெற்றுச் சென்றனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம், கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் விசேட பூஜைகள் இடம்பெறுவதோடு, முருகப்பெருமான் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv