எமக்கு தெரிந்து மஹத் ஒரு ஏமாற்றுப்பேர்வழி ஏன் இப்படி சொல்கிறேன் என்பதை இந்த பதிவை படிப்பதன் மூலம் அறிந்துகொள்ள முடியும் . தன்னுடைய காதலன் இன்னொரு பெண்ணுடன் சிரித்து பேசினாலே தவறான அர்த்தம் கொண்டு சண்டை ஆரம்பித்து அது பிரிவில் கூட வந்து நிக்கும் . இது பல ஆண்களின் வாழ்க்கையில் நடக்கும் விடயம் ஆனால் மஹத்தின் காதலியும் நடிகை, மாடல்,தொகுப்பாளினி என பல்வேறு திறமை கொண்ட பெண்ணான பிராச்சி மிஸ்ரா சற்று வேறு பட்டவர் . தன்னுடைய காதல் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை கொண்டவர் . அத்துடன் மஹத் மீதும் தீராத காதலில் இருந்தார் .
ஏற்கனவே மஹத்தின் லீலைகளை பார்த்த மிஸ்ரா அவர் பெண்களுடன் நல்ல நண்பனாக பழகுவார் அதன் நெருக்கமே அன்றி ஒரு நாளும் தவறு செய்ய மாட்டார். அவர் என் மீது உண்மையான காதலில் உள்ளார் என வீடியோ பதிவிட்டு இருந்தார் .
ஆனால் நேற்று மஹத் யாஷிகா விடம் காதல் சொன்ன நொடியில் மனமுடைந்து போய் உள்ளார் . நான் இதை எதிர்பார்க்கவே இல்லை மஹத் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன் . எந்த சூழ்நிலை வந்தாலும் பிரியவே கூடாதென இருவரும் முடிவு எடுத்திருந்தோம்.
பிக் பாஸ் செல்லும் நொடியில் கூட கண்கலங்கி சென்றார் ஆனால் இன்று யாஷிகா மீது காதல் உள்ளது என்கிறார் . மனதால் உடைந்துவிட்டேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிராச்சி மிஸ்ரா ரசிகர்களிடமும் வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளார் .
தயவு செய்து என் பதிவுக்கு பின்னூட்டம் இடாதீர்கள் நான் மனதால் உடைந்தூபோய் உள்ளேன் . மீண்டும் அதை காயப்படுத்தாதீர்கள் . நீங்கள் என் மீது அதிக அன்பு என புரிகிறது . மஹத் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இது பற்றி பேசி நல்ல முடிவு ஒன்றை எடுப்பேன் .
எப்போதும் உறவாக என்னை நினைத்து அன்பு காட்டிய உங்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார் . மஹத் உண்மையில் நீங்கள் இழந்தது ஒரு தூய்மையான காதலை என்பதை மறக்காதீர்கள்..!
https://youtu.be/dKH2H29inNw