பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கியமாக இவர்களின் பக்கம் தான் அதிக பார்வைகள் இருக்கும் அதாவது மும்தாஜ், ஜனனி, ரித்விகா, யாஷிகா, இப்ப ஐஸ்வர்யா . இதில் மக்களுக்கு பிடித்தவர்களாக இருப்பது இரண்டு பேர் தான். ஜனனி மற்றும் ரித்விகா தான்.
மற்றைய போட்டியாளர்களின் பார்வையும் கோவமும் இவர்கள் மேல் தான் . இன்று முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது . அதில் டாஸ்கில் சிறப்பாக விளையாடி பெஸ்ட் பேர்பேமராக தெரிவு செய்யப் பட்ட மஹத் மற்றும் யாஷிகா இருவரில் ஒருவரை போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டது . அது மட்டுமின்றி தலைவருக்கு போட்டியிடுபவர் மற்ற போட்டியாளர்களின் நல் எண்ணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டது .
இதன் போது டானியல் , சென்றாயன், ஐஸ்வர்யா, பாலாஜி, போன்றோர் யாஷிகாவிற்கு வாக்களிக்க ஜனனி மஹத்திற்கு வாக்களித்தார் . மும்தாஜ் இனி போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என யாஷிகா கூறுகிறார் இதற்கான காரணம் என்ன என்று சாரியாக தெரியவில்லை .
சில வேலை உடல் நிலை சரி இல்லையென மும்தாஜ் வெளியேறவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது . என்ன இருந்தாலும் கொஞ்சம் சரியாக இருந்தவர் மும்தாஜ் தான் .
இன்னும் பிக் பாஸ் வீட்டிற்குள் யாரும் வராத நிலையில் இந்த பிக் பாஸ் எப்படி செல்லப் போகிறது என்று ரசிகர்கள் தலையை குழப்பிக் கொண்டிருகின்றனர் . பொறுத்து இருந்து பார்க்கலாம் . என்ன நடக்கிறது என்று.!
https://www.facebook.com/VijayTelevision/videos/379925955873653/?t=0