கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக பொது மக்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட அலுவலக தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட அலுவலகத்துடன் இன்று தொடர்பு கொண்டு வினவிய போதே இந்த தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இவ்வாறு அதிகரித்து வரும் வறட்சியின் காரணமாக இதுவரை 21,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவட்டத்தின் 7 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு தினமும் 32,000 லீற்றர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.