Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட 61 மாணவிகளின் 12 ஆம் ஆண்டு நினைவுதினம்

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட 61 மாணவிகளின் 12 ஆம் ஆண்டு நினைவுதினம்

முல்லைத்தீவு – செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை வான்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 61 மாணவிகளின் 12 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு வள்ளிபுரம் இடைக்காட்டு சந்தியில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு காலை 6 மணியளவில் இலங்கை வான்படையின் இரண்டு கிபிர் போர் விமானங்கள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது குண்டுத் தாக்குதலை நடத்தியது.

இதன்போது 61 மாணவிகள் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தனர்.

அன்று இந்த சம்பவம் தமிழர் தாயகம், புலம்பெயர் தேசம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

போரினால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண் பிள்ளைகளின் பராமரிப்புக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1991ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 23ஆம் திகதி செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் செஞ்சோலை மாணவிகள் முல்லைத்தீவு வள்ளிபுரத்தில் தற்காப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்ததை அறிந்த இலங்கை அரசபடைகள் 2006 ஆம் ஆண்டு காலை 6.00 மணியளவில் கிபிர் போர் விமானங்களில் இருந்து மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் விடுதலைப் புலிகளின் போர் பயிற்சியில் ஈடுபட்டோர் மீதே நடத்தப்பட்டது என இலங்கை அரசு அப்போது உலக நாடுகளுக்கு தெரிவித்திருந்தது.

எனினும் மாணவிகள் தற்காப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது என பன்னாட்டு கண்காணிப்பாளர்களும் தொண்டு நிறுவனங்களின் அதிகாரிகளும் தெரிவித்திருந்தனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv