Tuesday , August 26 2025
Home / சினிமா செய்திகள் / பிக்பாஸ் வீட்டில் புது காதல் மலர்ந்தது- ஆனால் அங்கேதான் ஒரு டுவிஸ்ட்

பிக்பாஸ் வீட்டில் புது காதல் மலர்ந்தது- ஆனால் அங்கேதான் ஒரு டுவிஸ்ட்

பிக்பாஸ் வீட்டில் நாம் எதிர்ப்பார்க்காத நிறைய விஷயங்கள் நடக்கும். இப்போதும் ஒன்று நிகழ்ச்சியில் நடந்துள்ளது.

இன்று வெளியாகியுள்ள பியார் பிரேமா காதல் என்ற படத்தின் புரொமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண், ரைசா, இயக்குனர் இளன் என மூவரும் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது ஹரிஷ், மஹத்-யாஷிகாவின் உறவு நட்பையும் தாண்டி புனிதமானது இது சரியா, தவறா என்று கேள்வி கேட்கிறார். அதற்கு மஹத் இல்லை என்று கூற யாஷிகா ஆமாம் என்ற அட்டையை காட்டுவது போல் புரொமோவில் உள்ளது.

அதோடு யாஷிகாவிற்கும், மஹத்திற்கும் வழக்கம் போல் மும்தாஜ் அறிவுரை கூறுகிறார். இருவரிடமும் காதல் ஏற்பட்டுள்ளதா இல்லை புரொமோ அப்படி எடிட் செய்யப்பட்டுள்ளதா என்பதை பொறுத்திருந்து தெரிந்து கொள்வோம்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv