Thursday , October 16 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இராணுவத்தை களமிறக்குகிறது அரசாங்கம்!

இராணுவத்தை களமிறக்குகிறது அரசாங்கம்!

உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு இராணுவத்தின் உதவியுடன் நாளைய தினம் பேருந்து சேவைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணியாளர்கள் முன்னெடுத்துள்ள பணி பகிஸ்கரிப்பு காரணமாக, பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று மாலை கொழும்பிலும் ஒருவித அசாதாரண நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், நாளைய தினம் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு இராணுவத்தின் உதவியுடன் பேருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv