Thursday , October 16 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சம்பந்தனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா

சம்பந்தனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா

அரசாங்கத்தில் இருந்து விலகப்போவதாக கூறியவர்கள் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு அரசாங்கத்தில் இருக்கலாம் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

70 பேர் இருக்கின்றார்கள் என்பதற்காக அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. எதிர்க்கட்சியில் இருக்கும் தமிழ் கட்சியானாலும், ஐக்கிய தேசியக் கட்சியானாலும் அவர்கள் நினைப்பதைப் போன்று அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.

அரசாங்கம் இருக்கும் வரைக்கும் அவர்களும் அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித்தலைவர் பதவி கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடமே இருக்க வேண்டும் என்று சுதந்திரக் கட்சியே முடிவு செய்துள்ளது. அதுதான் சரியான முடிவு.

எதிர்க்கட்சித்தலைவர் பதவியை கோருபவர்கள் இன்னும் சுதந்திரக்கட்சியிலேயே இருக்கின்றார்கள்.

இவர்கள் பிரிந்து சென்று பொதுஜன பெரமுனவில் இணைந்தாலும் அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும். ஆகவே இவர்களுக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வழங்க முடியாது என அமைச்சர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv