தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் கமல் நடிப்பது மட்டும் இல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இதெல்லாம் போதாமல் தமிழ் பிக்பாஸையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும் கமல் வார இறுதி நாட்களில் பிக்பாஸில் மக்களிடையே பேசுவார்.
அவ்வாறு நேற்று பேசியபோது தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் எனவும் அவர் தான் எனக்கு ஹீரோ, ஆனால் கிரிக்கெட் என் மனதை எங்கோ இழுத்து செல்கிறது. அதனால் அதை பார்பதை நிறுத்திவிட்டேன் என்றார்.
மேலும் இதுபோன்ற பொழுதுபோக்குகளினால் மக்களின் கவனம் திட்டமிட்டு திசை திருப்பப்படுகிறது என்றார். இவரது இந்த கருத்தினால் கொதித்து எழுந்த கிரிக்கெட் ரசிகர்கள் ‘அப்போ பிக்பாஸ் மட்டும் என்னதான்?’ என பயங்கரமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.