Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பெற்றோருக்கு எச்சரிக்கை – இரண்டு வயது சிறுமி பரிதாபமாக மரணம்

பெற்றோருக்கு எச்சரிக்கை – இரண்டு வயது சிறுமி பரிதாபமாக மரணம்

கம்பளையில் இரண்டு வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகல்ல, கூறுகல கிராமத்தை சேர்ந்த ரசிகா ரஷ்மி வீரசேன என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 31ஆம் திகதி இரவு உணவுக்காக காட்டுப் பன்றி உட்கொண்டமையினால் சிறுமி சுகயீனமடைந்துள்ளார்.

பின்னர் நேற்று காலை சிறுமி வைத்தியசாலையில் அனுமதித்த போது உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது சிறுமியின் சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 31ஆம் திகதி அந்தப் பகுதி மக்கள் இரவு உணவிற்காக காட்டுப் பன்றியை சமைத்ததாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுவர்களுக்கு இவ்வாறான கடினமான உணவுகளை கொடுப்பதை தவிர்க்குமாறு பெற்றோருக்கு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv